--- --:--:-- --

தமிழகத்தில் இன்று மழை வெளுக்கும்..!

4

மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

 

மேலும், சென்னையில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, உள் தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்றும், 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon