வேகமெடுக்கும் கொரோனா… தமிழகத்தில் பாதிப்பு 3200-ஐ கடந்தது
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இன்று ஒரேநாளில் 3,290 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்த புள்ளி விவரங்களை தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்டது.
அதன்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 3,290 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மேலும் 1,188 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,92,780 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும், 12 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,750 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 1,715 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,61,424 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 18,606 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,94,42,502 ஆகும். இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 85,494 ஆகும். தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 18,606 என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




