--- --:--:-- --

மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள சூயஸ் கால்வாய்..!

8

சூயஸ் கால்வாயில் மணலில் சிக்கி இருந்த மிகப்பெரிய சரக்கு கப்பல் மீட்கப்பட்ட இடத்தில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.எவர்கிரீன் கப்பல் கடந்த செவ்வாயன்று மத்தியதரைக்கடலிடையே சூயஸ் கால்வாயில் செல்லும் போது பலத்த காற்று வீசியதால் மணலில் தரைதட்டி நின்றது.

 

இதனால் சரக்கு பெட்டகங்கள், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு ஆகியவற்றை ஏற்றிவந்த 369 கப்பல்கள் செல்ல வழி இல்லாததால் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. உலகின் கப்பல் போக்குவரத்தில் 15 விழுக்காடு சூயஸ் கால்வாயின் வழியே நடைபெறும் என்பதால் ஒரு நாளைக்கு 100 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது.

 

நெதர்லாந்தை சேர்ந்த ஸ்மிதாவை எனும் நிறுவனம் கப்பலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டது. 30,000 கனமீட்டர் மணலை அள்ளி கப்பல்களில் உதவியுடன் ஓரத்தில் வைத்து கால்வாயில் நீர் மட்டம் உயர்ந்த போது கப்பல் மீட்கப்பட்டது. அதன்பின் நீர்ப்பரப்பில் மிதக்கும் இடத்திற்கு சென்றது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon