பொன்னாடை போர்த்த வந்த இளைஞரை தடுத்த ஹரி..!
கோபிச்செட்டிபாளையத்தில் தனக்கு பொன்னாடை போர்த்த வந்த இளைஞரை தடுத்த ஹரியை உஷாரான ஆள் தான் என்று அவரின் கட்சி நிர்வாகிகளை சொல்கிறார்கள். ஹரி நாடார் கழுத்து நிறைய நகைகளை அணிந்து வலம் வருபவர்.
கழுத்தில் கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகள் அணிந்து கொண்டு இருக்கிறார். ஆனால் கடும் உஷாரான ஆளு என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். அதை நிரூபிக்கும் வகையில் கோபிசெட்டிபாளையத்தில் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள திங்களூரில் பனங்காட்டு படை கட்சி தலைவர்கள் ராக்கெட் ராஜா ஒருங்கிணைப்பாளர் ஹரி ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தனர். இதனை ஏராளமான பனங்காட்டு படை கட்சி இளைஞர்கள் அங்கே கூடியிருந்தனர்.
வாகனங்களின் மேல் அமர்ந்து கூச்சல் போட்டவாறு சென்று கொண்டிருந்தனர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தலைவர் ராக்கெட் ராஜா வை விடஹரியை பார்க்கத்தான் இளைஞர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினார்.
ஹரியும் மிகுந்த உற்சாகத்துடன் நெல்லை பாஷையில் இளைஞர்களிடத்தில் பேசிக்கொண்டிருந்தார். ஹரி பேசி முடித்ததும் மேடை ஏறிய இளைஞர் ஒருவர் அவருக்கு பொன்னாடை போர்த்த வந்தார். இதனை பார்த்ததும் ஹரி தனக்கு பொன்னாடை எல்லாம் வேண்டாம் என்று கூறி இளைஞரின் பொன்னாடையை ஏற்க மறுத்தார்.






