ராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் 114 பேர் உயிரிழப்பு..!
மியான்மரில் ராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் 114 பேர் கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளில் பாதுகாப்பு துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மியான்மரின் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பிப்ரவரி முதல் நாளில் ராணுவம் கவிழ்ந்தது.
இன்றைய ஆட்சியாளர்கள் அனைவரும் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். இதைக் கண்டித்து போராட்டம் நடத்துபவர்கள் மீது துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட கடுமையான அடக்குமுறைகளை ராணுவம் கையாண்டு வருகிறது.
இந்த நிலையில் வெள்ளியன்று தேசிய ஆயுதப்படை நாளை முன்னிட்டு யான்கண் மாண்டலே உள்ளிட்ட நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 114 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
படுகொலை செய்த மியான்மர் ராணுவ ஆட்சிக்கு அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகள் 12 நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.






