பிரச்சாரத்தின் போது வேட்பாளர் பெயரை தவறாக கூறிய விஜயபிரபாகரன்..
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் வேட்பாளரின் பெயரை தவறாக கூறிய விஜயபிரபாகரன் தொண்டர்கள் சுட்டிக் காட்டியதும் சிரித்துக்கொண்டே சமாளித்தார்.
நிலக்கோட்டை தொகுதி தேமுதிக வேட்பாளர் ராமசாமியை ஆதரித்து அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பயிற்சியை தொடங்கும் போது ராமசாமி பெயரை சிவக்குமார் என அவர் தவறுதலாக குறிப்பிடவே சம்பந்தப்பட்ட தொண்டர்களும் பலரும் அதனை சுட்டிக்காட்டினார்.
உடனே சுதாரித்து ராமசாமி என குறிப்பிட்ட விஜயபிரபாகரன் நீங்கள் எல்லோரும் கவனமாக இருக்கிறீர்களா என பரிசோதித்து பார்த்தேன் என்று கூறியுள்ளார்.






