--- --:--:-- --

அமெரிக்காவை புரட்டிப் போட்ட 14 சூறாவளி..!

6

மெரிக்காவை புரட்டிப்போடும் டொர்னாடோ என்கிற சூறாவளியால் மக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். நோய் தொற்றால் உலகளவில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா. கிட்டத்தட்ட ஓராண்டிற்குப் பின்னர் மீண்டு வர முயற்சி செய்து இருக்கும் அமெரிக்காவிற்குப் புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது.

 

அமெரிக்காவில் உள்ள மாகாணம் அடுத்தடுத்த வீசிய 14-வது சூறாவளி அந்த மாகாணத்தை தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது. மின்கம்பங்கள் பலவும் அடியோடு சாய்ந்து உள்ளன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின.

 

சூறாவளி காற்றை தொடர்ந்து மழை பெய்ததால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பலமாக வீசிய காற்றால் வீடுகள் பலவும் எரிந்து தரைமட்டமாகின. மேலும் அந்த மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 5 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon