மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வர கோரிக்கை..!
மகாராஷ்டிராவில் கொரொனா இரண்டாவது அலை வேகமாக வீசிக் கொண்டு வருகிறது.
மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் வியாபாரிகளிடம் மாதம்தோறும் 100 கோடி ரூபாய் லஞ்சமாக வசூலித்துத் தர கூறினார் என மும்பை முன்னாள் காவல் ஆணையர் பரம்வீர் சிங் வெளியிட்ட பரபரப்பு குற்றச்சாட்டால் அந்த மாநில அரசுஅரசியல் தகிக்க தொடங்கியுள்ளது.
மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே, மகாராஷ்டிரா அரசை கலைக்குமாறு குடியரசுத் தலைவரிடம் நேரில் முறையிட்டார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ் தனது கோரிக்கையை பரிசீலிப்பதாக குடியரசுத் தலைவர் உறுதியளித்ததாக தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டுவர வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியை ஏற்கனவே கூறியிருந்தது. இவ்வாறாக மகாராஷ்டிர அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்து தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் ஆலோசனை செய்தார். முன்னாள் காவல்துறை ஆணையர் பரம்வீர் சீன் கூறிய குற்றச்சாட்டை உள்துறை அமைச்சர் தேஷ்முக் திட்டவட்டமாக மறுத்து இருந்தார்.
இதற்கிடையே தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருட்கள் நிரம்பிய கார் நிறுத்தப்பட்டு இருந்ததற்கு தொடர்பு உள்ளதாக கூறி மும்பை காவல் அதிகாரியை தேசிய புலனாய்வு முகமை கைது செய்திருந்தது.






