மீன் வறுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ம.நீ.ம. வேட்பாளர்..!
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் களத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அடித்தட்டு மக்களின் அன்றாட பணிகளில் பங்கு கொண்டபடியே வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை திரட்டி வருகின்றனர்.
அந்த வகையில் தான் சென்னை எழும்பூர் தனித்தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரும் வித்தியாசமான முறையில் தனக்கான வாக்குகளை சேகரித்தார்.
எழும்பூரில் போட்டியிடும் பிரியதர்ஷினி, நரியங்காடு பகுதிக்குட்பட்ட சின்ன குழந்தை தெரு மூர்த்தி தெரு உள்ளிட்ட பகுதிகளில் டார்ச்லைட் சின்னத்துடன் சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது நரியங்காடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் சமைத்துக் கொண்டிருந்த பெண்களிடம் வாக்கு சேகரித்த பிரியதர்ஷினி அவருக்கு பதிலாக மீன் வறுவலில் ல் ஈடுபட்டார்.
மீன் வறுத்துக்கொண்டே டார்ச்லைட் சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்ட பிரியதர்ஷினி தங்கள் சின்னம் பொறிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தை அனைவருக்கும் விநியோகித்தார்.






