முகக்கவசம் அணியாத 40 ஆயிரம் பேர்..! 88 லட்சம் அபராதம் வசூல்..!
தமிழகம் முழுவதும் முகக்கவசம் அணியாத 40 ஆயிரம் பேரிடம் இருந்து 88 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .உலக காசநோய் தினத்தையொட்டி சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தமிழகத்தில் கொரொனா அதிகரிப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனக்கூறி ராதாகிருஷ்ணன் தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மூன்று நாட்களில் முகக்கவசம் அணிய சுமார் 40 ஆயிரம் பேரிடம் இருந்து 88 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
கொரொனா தொற்று தடுப்பூசி மையங்களை அதிகரிக்க தேவையிருந்தால் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆணையருக்கு அறிவுறுத்தல் வழங்கி இருப்பதாகவும் அரசின் வழி முறைகளை முறையாக பின்பற்றினால் தான் கொரொனா தொற்று குறையும் என்றும் அவர் கூறினார்.
பெருந்தொற்று பரவலை கருத்தில் கொண்டே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.






