இரட்டை இலைக்கு வாக்களிக்கவில்லை எனில் உங்களுக்கு நல்ல சாவே வராது..!
நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் கேபி பாஸ்கர் வாக்காளர்கள் குறித்து பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே பி பி பாஸ்கர் மூன்றாவது முறையாக நாமக்கல் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் மோகனூரில் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கேபிபி பாஸ்கர் பேசியது பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. இரட்டை இலைக்கு வாக்களிக்கவில்லை எனில் உங்களுக்கு நல்ல சாவே வராது என அவர் கூறியதால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.






