--- --:--:-- --

தஞ்சாவூரில் மேலும் 17 மாணவர்களுக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது..!

8

ஞ்சாவூர் மாவட்டத்தில் மேலும் 17 மாணாக்கர்கள் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பள்ளி கல்லூரிகளில் கொரோனா பாதிப்பு 192 ஆக அதிகரித்துள்ளது.

 

தஞ்சை மாவட்டத்தில் 11 பள்ளி மாணாக்கர்களுக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்டு இருக்கும் நிலையில் இன்று சரஸ்வதி பாடசாலை பள்ளியை சேர்ந்த மேலும் 10 மாணவர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

 

மேலும் மாரியம்மன் கோயில் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 2 மாணவர்களுக்கும், கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கும் கொரொனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

 

இதுவரை 11 பள்ளிகள், இரண்டு கல்லூரிகள் மற்றும் ஒரு பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon