கொரொனா விதிமுறைகளை மீறி எடுக்கப்பட்ட விஜய்சேதுபதியின் சூட்டிங்..!
திண்டுக்கல்லில் கொரொனா விதிமுறைகளை மீறி நடந்த படப்பிடிப்பை பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுக்க முயன்றதால் தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த விஜய் சேதுபதி பத்திரிக்கையாளர்களை சமாதானப்படுத்தியும் அவர்கள் ஏற்காததால் தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
முக கவசம் அணியாமலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் படப்பிடிப்பு நடத்தியதாக புகார் வந்துள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் படக்குழுவினருடன் கேள்வி கேட்க சென்றுள்ளனர்.
தயாரிப்பு குழுவை சேர்ந்த ஒருவர் பத்திரிக்கையாளர்களை கொலை மிரட்டல் விடுத்து தாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.






