கமல்ஹாசன் காலில் வீக்கம் இருப்பதால் இன்றைய நிகழ்வுகள் ரத்து..!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் காலில் வீக்கம் இருப்பதால் ஓய்வு தேவை என மருத்துவர் கூறியதையடுத்து அவரின் பொதுக் கூட்ட நிகழ்வுகளை தவிர்த்து இன்றைய நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டன.
மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் இன்று காலை கோவை ஆர்எஸ் புரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அவருடன் பேசவும் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் பொதுமக்கள் கூடியபோது அவரின் காலில் மிதித்ததால் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட காலில் வலி ஏற்பட்டுள்ளது.
அதனால் மருத்துவரிடம் ஆலோசனை செய்த போது ஓய்வு தேவை என மருத்துவர் தெரிவித்துள்ளார். எனவே சிங்காநல்லூர் பொதுக்கூட்டம் தவிர மற்ற நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






