இரண்டாவது நாளாக கொரொனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது.!
தமிழகத்தில் இரண்டாவது நாளாக தினசரி கொரொனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக சென்னையில் 458 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மீண்டும் படிப்படியாக பாதிப்பு அதிகரித்து வருகிறது.
சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி மாநிலம் முழுவதும் ஒரே நாளில் ஆயிரத்து 243 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் 458 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 134 பேருக்கும் கோவையில் 103 பேருக்கும் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இரண்டாவது நாளாக கொரொனா பாதிப்பு ஆயிரத்தை கடந்து பதிவாகியுள்ளது.






