30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசுப்பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்..!
மதுரை திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட கப்பலூர் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசுப்பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பரிசுப்பொருட்களை ஆளும் கட்சியினர் பதுக்கி வைத்திருப்பதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தனர்.
கிடங்கில் அதிகாரிகள் சோதனை நடத்துவதற்கு முன்னர் இருந்தவர்களை எதிர்க்கட்சியினர் நிர்வாகிகள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சோதனையிட்ட அதிகாரிகள் பொருட்களை பறிமுதல் செய்து அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆகியோரின் படங்களை ஸ்டிக்கர்களை அங்கிருந்து கைபற்றியுள்ளனர்.






