--- --:--:-- --

வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் இருந்து பிரியாணிக்காக முண்டியடித்த மக்கள்..!

4

கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளரின் கூட்டத்திற்கு வந்தவர்கள் பிரியாணி வாங்க முடியாததால் அந்த அறிமுகக் கூட்டம் களை இழந்தது.

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக, திமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பலர் அறிமுகப்படுத்தப்பட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாமக வேட்பாளர் செல்வகுமார் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

 

இந்தக் கூட்டத்தில் 1000 க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்ற பாமக, பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் அருகே 4 டாட்டா ஏசி வாகனங்களில் பிரியாணி வழங்குவதற்காக வந்து நின்றனர்.

 

அப்போது கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும்கூட்டம் நடைபெறுவதை பொருட்படுத்தாமல் பிரியாணி வாங்குவதற்காக சென்றுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon