--- --:--:-- --

திடீரென தேர்தலில் குதித்த காமெடி நடிகர்! சுயேச்சையாக மனு!

Mayilsami

நடிகர் மயில்சாமி தமிழ்த்திரைப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர்.

 

பல்வேறு படங்களில் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் மயில்சாமி. அதிமுகவில் நட்சத்திரப் பேச்சாளராக இருந்த இவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, கட்சி செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.

 

அத்துடன், தொலைக்காட்சி விவாதங்களில் மட்டும் தனது சொந்தக் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டு வந்தார். கொரோனா தொற்றின் போது, தாம் வசித்துவரும் விருகம்பாக்கம் தொகுதியில் மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தார்.

 

இந்த நிலையில், எதிர்வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில், திடீரென மயில்சாமி களமிறங்கி இருக்கிறார். எந்த கட்சியையும் சாராமல் தற்போது சுயேச்சையாகப் போட்டியிடுவதற்காக சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

 

விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் ரவி, திமுக சார்பில் பிரபாகர் ராஜா, மக்கள் நீதி மய்யம் சார்பில் சிநேகன் உள்ளிட்ட பலர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon