--- --:--:-- --

தமிழக அமைச்சர்களுக்கு நிறுத்தப்பட்டுள்ள வலுவான திமுக வேட்பாளர்கள்…

admk dmk 01

முதல்வர் பழனிச்சாமி உள்பட தமிழக அமைச்சர்களுக்கு எதிராக வலுவான வேட்பாளர்களை திமுக நிறுத்தியுள்ளது. கோவையில் வேலுமணிக்கு எதிராக கார்த்திகேய சேனாதிபதி போட்டியிடுகிறார். கரூரில் எம்ஆர் விஜயபாஸ்கருக்கு எதிராக, செந்தில் பாலாஜி இறக்கப்பட்டுள்ளார்.

 

அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை தொடர்ந்து இன்று அமாவாசை நாள் பார்த்து திமுக வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகி இருக்கிறது. இதில், 13 பெண்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. மு.க. ஸ்டாலின் கொளத்தூரிலும் துரைமுருகன் காட்பாடியிலும் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் – திருவல்லிகேணியிலும் போட்டியிடுகிறார்கள்.

இவர்களில், திமுகவின் மூத்த தலைவரான துரைமுருகன் வேலூர் மாவட்டத்தில் பிறந்தவர். ஒவ்வொரு முறையும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாகையை சூடிய துரைமுருகன், காட்பாடியை தனது கோட்டையாகவே மாற்றி வைத்திருக்கிறார். தொடர்ச்சியாக 25 ஆண்டுகள் காட்பாடி எம்.எல்.ஏவாக இருந்திருக்கிறார்.

 

கடந்த, 1971 ஆம் ஆண்டு முதல் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 12வது முறையாக போட்டியிடும் இந்த மூத்த அரசியல்வாதி, இதுவரை 9 முறை காட்பாடியிலும் 2 முறை ராணிப்பேட்டை தொகுதியிலும் போட்டியிட்டுள்ளார். அந்த வகையில், தொடர்ந்து 10ஆவது முறையாக காட்பாடியிலேயே களமிறங்குகிறார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் வி.ராமு போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழக அமைச்சர்களை வெற்றி பெறச்செய்யக்கூடாது என்பதற்காக, வேட்பாளர்கள் அலசி ஆராய்ந்து, பலம் பலவீனங்களை பட்டியலிட்டு, வேட்பாளர்களை திமுக நிறுத்தியுள்ளது. அதற்கு உதாரணம், கோவையில் வேலுமணிக்கு எதிராக கார்த்திகேய சேனாதிபதி போட்டியிடுகிறார். கரூரில் எம்ஆர் விஜயபாஸ்கருக்கு எதிராக, செந்தில் பாலாஜி இறக்கப்பட்டுள்ளார்.

முதல்வர் பழனிச்சாமி உள்பட 25 அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில், திமுக வேட்பாளர்கள் விவரம் இதோ:

 

1. எடப்பாடி: பழனிசாமி – – சம்பத் குமார்

2. போடி: ஓ. பன்னீர்செல்வம் – தங்க தமிழ்ச்செல்வன்

3. ராயபுரம் : ஜெயக்குமார் – ஐட்ரீம் இரா.மூர்த்தி

4. ஆவடி: க.பாண்டியராஜன் – சா.மு.நாசர்

5. மதுரவாயல்: பென்ஜமின் – காரப்பாக்கம் கணபதி

6. விழுப்புரம்: சிவி சண்முகம் – லட்சுமணன்

7. கடலூர்: எம்சி சம்பத் – கோ.அய்யப்பன்

8. ஆரணி: சேவூர் ராமச்சந்திரன் – எஸ்.எஸ் அன்பழகன்

9. ஜோலார்பேட்டை: கேசி வீரமணி – க. தேவராஜி

10. ராசிபுரம்: சரோஜா (தனி) – மதிவேந்தன்

11.பாலக்கோடு: கேபி அன்பழகன் – பிகே முருகன்

12. குமாரபாளையம்: தங்கமணி – எம்.வெங்கடாசலம்

13. தொண்டாமுத்தூர்: வேலுமணி – கார்த்திகேய சேனாதிபதி

14. கோபி: செங்கோட்டையன் – ஜி.வி. மணிமாறன்

15. பவானி: கருப்பணன் – கேபி துரைராஜ்

16. கரூர்: எம்ஆர் விஜயபாஸ்கர் – செந்தில் பாலாஜி

17. திருச்சி கிழக்கு: வெல்லமண்டி நடராஜன் – முனைவர் இனிகோ. இருதயராஜ்

19. விராலிமலை : சி.விஜயபாஸ்கர் – பழனியப்பன்

20. மதுரை மேற்கு: செல்லூர் ராஜு – சின்னம்மாள்

21. திருமங்கலம்: ஆர்பி உதயகுமார் – மு. மணிமாறன்.

22. வேதாரண்யம்: ஓஎஸ் மணியன் – வேதரத்தினம்

23. நன்னிலம் : காமராஜ் – ஜோதிராமன்

24. ராஜபாளையம்: ராஜேந்திர பாலாஜி – சௌ.தங்கபாண்டியன்

25. சங்கரன்கோவில் : ராஜலெட்சுமி – ஈ.ராஜா.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon