--- --:--:-- --

ம.நீ.ம வேட்பாளர்கள்: கோவை தெற்கில் கமல்ஹாசன், மயிலாப்பூரில் நடிகை ஸ்ரீபிரியா போட்டி!

Kamal 02

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.  மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதிமய்யம் கட்சி, சரத்குமாரின் சமகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

 

மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை, கமல்ஹாசன் இன்று சென்னையில் வெளியிட்டார்.  அதன்படி, சென்னை தி.நகர் தொகுதியில் பழ.கருப்பையா போட்டியிடுகிறார்; மயிலாப்பூர் தொகுதியில் நடிகை ஸ்ரீபிரியா, சிங்காநல்லூரில் மகேந்திரன் களமிறக்கப்பட்டுள்ளார்.

சட்டசபைத் தேர்தலில் முதல்முறையாக நடிகர் கமல்ஹாசன் களமிறங்குகிறார். கோவை தெற்கு தொகுதியில் அவர் போட்டியிடுகிறார். இங்கு, திமுக, அதிமுக போட்டியிடவில்லை. காங்கிரஸ் மற்றும் பாஜக போட்டியிடும் தொகுதியாகும்.

முதல்வர் பழனிச்சாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் தாசப்பராஜ், வேளச்சேரியில் சந்தோஷ் பாபு  ஐஏஎஸ், கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலில் சுபா சார்லஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon