--- --:--:-- --

காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள்… வெளியானது அதிகாரபூர்வ பட்டியல்!

Congress 03

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. கோவை தெற்கு, உடுமலைப்பேட்டை, ஈரோடு கிழக்கு உள்ளிட்ட இடங்களில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.

 

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே 25 தொகுதிகள் எவை என்பது குறித்து இரு கட்சி தலைவர்களிடையே பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது. முடிவில், திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி ஒதுக்கீடு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்படி, கீழ்கண்ட இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தொகுதிகள் விவரம் வருமாறு:

 

பொன்னேரி
ஸ்ரீபெரும்புதூர்
சோளிங்கர்
ஊத்தங்கரை
ஓமலூர்
உதகை
கோவை தெற்கு
காரைக்குடி
மேலூர்
சிவகாசி
ஸ்ரீவைகுண்டம்
குளச்சல்
விளவங்கோடு
கிள்ளியூர்
ஈரோடு கிழக்கு
தென்காசி
அறந்தாங்கி
விருதாச்சலம்
நாங்குநேரி
கள்ளக்குறிச்சி
ஸ்ரீவில்லிப்புத்தூர்
திருவாடனை
உடுமலைப்பேட்டை
மயிலாடுதுறை
வேளச்சேரி

 

இதில், கோவை தெற்கு, காரைக்குடி, குளச்சல், உதகை மற்றும் விளவங்கோடு தொகுதிகளில் தேசிய கட்சிகளான காங்கிரஸ் – பாஜக நேரடியாக மோதுகின்றன.

 

 

இதனிடையே, புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் இடையேயும் உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது. அங்கு காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், திமுக 13 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon