--- --:--:-- --

திருப்பூர், அவிநாசி அதிமுக வேட்பாளர்கள் யார் யார்… பட்டியல் வெளியிட்டது அதிமுக!!

ADMK 01

சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் 171 அதிமுக வேட்பாளர்களின் 2ம் கட்ட பட்டியல் வெளியாகி இருக்கிறது.

 

அதன்படி, திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் விஜயகுமார், திருப்பூர் தெற்கில் குணசேகரன், அவிநாசியில் சபாநாயகர் தனபால், பல்லடத்தில் எம்.எஸ்.எம். ஆனந்தன், அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சியில் ஜெயராமன், உடுமலைப்பேட்டையில் கே. ராதாகிருஷ்ணன், கிணத்துக்கடவில் செ. தாமோதரன், சிங்காநல்லூரில் கே.ஆர். ஜெயராஜன், தொண்டாமுத்தூரில் ஏ.வ. வேலுமணி, கோவை வடக்கில் அம்மன் கே. அர்ஜுணன், சூலூர் வி.பி. கந்தசாமி, மேட்டுப்பாளையம் ஏ.கே. செல்வராஜ் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

 

தற்போதுள்ள அமைச்சர்களின் 27 பேருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.  விராலிமலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார். அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ராஜபாளையத்தில் நிறுத்தப்பட்டுள்ளார். மதுரை மேற்கில் செல்லூர் ராஜு, திருச்சி கிழக்கில் வெல்லமண்டி நடராஜன், கரூரில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், திண்டுக்கல்லில் அமைச்சர் சீனிவாசன்  ஆகியோருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

 

அ.தி.மு.க இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் தற்போது அமைச்சராக உள்ள பாஸ்கரன், நிலோபர்கபில், எஸ்.வளர்மதி ஆகிய மூன்று பேருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

 

பாஜகவுக்கு ஒதுக்கப்படும் என்று கருதப்பட்டு வந்த ராஜபாளையம், பழனி, சேப்பாக்கம் உள்ளிட்டவை அதிமுகவுக்கே ஒதுக்கப்பட்டுள்ளன. கொளத்தூர் தொகுதியில் ஆதி ராஜாராம் நிறுத்தப்பட்டுள்ளார்.

 

பெருந்துறை தொகுதியில், முன்னாள் அமைச்சரும், சிட்டிங் எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாச்சலத்திற்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது;- வேட்பாளராக ஜெயகுமாரை அதிமுக அறிவித்திருக்கிறது.

 

முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, மாதவரம் மூர்த்தி, கோகுல இந்திரா, பா.வளர்மதி, சின்னய்யா,  வி.சோமசுந்தரம், கே.பி.முனுசாமி, அக்ரிகிருஷ்ணமூர்த்தி, கே.வி.ராமலிங்கம், ஏ.கே.செல்வராஜூக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

 

அதேபோல், முன்னாள் அமைச்சர்கள் எம்.எஸ்.எம்.ஆனந்தன், செ.தாமோதரன், நத்தம் விசுவநாதன், கு.ப.கிருஷ்ணன் பரஞ்ஜோதி, வைகைச்செல்வன், இசக்கி சுப்பையா ஆகியோருக்கு அதிமுகவில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

 

அதிமுகவில் பெரும்பாலான எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. திமுகவின் மொத்தம் 177 வேட்பாளர்களில் 15 பேர் மட்டும் பெண்கள். தற்போது சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ள 47 பேருக்கு அதிமுகவில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon