--- --:--:-- --

சிபிஎஸ்சி தேர்வு தேதியை மாற்ற கோரிக்கை..!

9

ரமலான் அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள சிபிஎஸ்சி தேர்வு தேதி மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.

 

இஸ்லாமியர்களின் முக்கியமான திருநாளான ரமலானை யொட்டி மே 14ஆம் தேதி அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரமலான் திருநாள் பிறை தென்படுவதை பொருத்து மாறும் என்பதால் ஒருநாள் முன்னதாகவோ அல்லது ஒருநாள் பின்னதாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது.

 

இதை கணக்கில் கொள்ளாமல் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு 12-ஆம் வகுப்பு தேர்வுகள் மே 13 மற்றும் மே 15ஆம் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என்று மதுரை எம்‌பி சு. வெங்கடேசன் மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இதையடுத்து சிபிஎஸ்சி தேர்வு தேதிகளை மாற்றுவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் பதிலுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon