கூகுள் பே, போன் பே மூலம் பணப்பட்டுவாடா நடைபெறுவதை தடுக்க நடவடிக்கை..!
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வாகன சோதனையில் உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 14 கோடியே 13 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் பணப்பட்டுவாடா மற்றும் வேட்பாளர்களின் செலவினங்களை கண்காணிக்க தேர்தல் செலவின பார்வையாளர்கள் திங்கள்கிழமை தமிழகம் வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கூகுள் பே, போன்பே மூலமாக வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்யப்படுவதை தடுக்க வங்கிகளில் பணப் பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.






