பாஜக கூட்டணிக்கே வெற்றி… அடித்துச் சொல்கிறார் மேலிட பொறுப்பாளர் ரவி!
வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும் பாஜக கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும் என்று, பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
பாஜக சார்பில், நீலகிரி உதகையில் இன்று தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. பாஜக சார்பில் இன்று தேர்தல் பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினராக, பாஜகவின் தமிழக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பங்கேற்று பேசினார். அதை தொடர்ந்துசேரிங்கிராஸ் முதல் ஏடிசி பகுதி வரை நடைபெற்ற ஊர்வலத்தில் பாஜகவினர் பங்கேற்றனர்.
இதன் முடிவில், செய்தியாளர்களிடம் சி.டி.ரவி பேசியதாவது: பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த சுயசார்பு பாரதம் திட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் தேர்தலில், தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும். நாங்கள் வெற்றிக்கொடி யாத்திரைக்கு சென்ற அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இது மக்களிடம் உள்ள ஆதரவை காட்டுகிறது..
சட்டசபைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். அதிமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பாஜக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தற்போதைய தேக்கநிலை முடிவுக்கு வந்து, ஓரிரு நாட்களில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




