தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் நீடிக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியினர் ஆலோசனை..!
திமுகவின் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் நீடிக்கும் நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். தொகுதி பங்கீடு குறித்து இதுவரை திமுகவுடன் காங்கிரஸ் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
அதில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. 30 தொகுதிகள் வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. ஆனால் அதற்கு திமுக இணக்கம் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் தமிழக மேலிட பொறுப்பாளர் தினேஷ் இன்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
அதன்பின் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநில நிர்வாகக்குழு கூட்டம் நடைபெறுகிறது..






