--- --:--:-- --

மூட நம்பிக்கையால் தனது மகனை கொன்ற தந்தை..!

7

மூடநம்பிக்கை கொடுஞ் செயல் புரிவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் எச்சரித்துள்ளார்.

 

தனது மகனால் எதிர்காலத்தில் தனக்கு ஆபத்து நேரலாம் என்று ஜோதிடர் கூறியதால் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ராம்கி தனது ஐந்து வயது மகனை குடிபோதையில் மண்ணெணெய் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தனது மகனால் ஆபத்து என ஜோதிடர் கூறியதால் ஐந்து வயது மகனை தந்தையை எரித்துக் கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் மன வேதனையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

 

மூட நம்பிக்கைகளால் அரங்கேறும் கொடுமைகளை தடுக்கும் வகையில் இதுபோன்ற கொடுஞ்செயல் புரிவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon