மது போதையில் விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் ஓட்டுனர்..!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து பேக்கரிகள் புகுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கிழக்கு கடற்கரை சாலையில் தொண்டி மைதானம் பஸ் ஸ்டாப் அருகில் இருந்த புதருக்குள் அந்த வழியாக வந்த டிராக்டர் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து புகுந்துள்ளது. இந்த விபத்தில் இரண்டு பெண்கள் காயமடைந்துள்ளனர். டிராக்டர் ஓட்டுநர் மது போதையில் இருந்ததால் விபத்து நேரிட்டது தெரியவந்துள்ளது.






