--- --:--:-- --

தமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா! தொற்றால் 2 பேர் உயிரிழப்பு

corona 01

தமிழகத்தில் இன்று ஒருநாளில் மட்டும், 489 பேருக்கு கோவிட் 19 எனப்படும் கொரொனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை, இன்று மாலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வெளிமாநிலத்தில் இிருந்து இன்று தமிழகத்துக்கு வந்தவர்களில் ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் 184 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 305 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில், இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 489. ஆகும். இவர்களில், ஆண்கள் 294 பேர். பெண்கள் 195 பேர். தொற்று உள்ளவர்களின் மொத்தம் எண்ணிக்கை 8,52,967 ஆகும். மொத்தம் தொற்று உள்ளவர்களில் ஆண்கள் 5,15,368 பேர்; பெண்கள் 3,37,564 பேர். மூன்றாம் பாலினத்தவர் 35 பேர் ஆவார்கள்.

 

தமிழகத்தில் இன்று மட்டும் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 494 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 8,36,473 பேர் ஆகும். கொரோனா தொற்றுக்கு தமிழகத்தில் இன்று இருவர் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12,504 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 4,157 பேர் உயிரிழந்துள்ளதாக, பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon