--- --:--:-- --

9,10,11 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும்..!

2

ன்பது, பத்து மற்றும் பதினொன்றாம் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

 

இன்று காலையில் முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் பொதுத் தேர்வு, முழு ஆண்டு தேர்வு எழுதாமல் அடுத்த வகுப்பிற்கு நேரடியாகச் செல்லலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 

ஆனால் மாணவர்களுக்கான பள்ளிகள் நாளை முதல் செயல்படுமா மாணவர்களுக்கான வகுப்புகள் நடத்தப்படுமா என்று பெற்றோர்கள் மத்தியில் ஒரு கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon