--- --:--:-- --

ஆறு கால்களுடன் பிறந்த அதிசய நாய்க்குட்டி..!

3

அமெரிக்காவில் ஓக்லகோமா நகரில் ஆறு கால்களுடன் நாய்க்குட்டி ஒன்று பிறந்துள்ளது. இந்த நாய்க்குட்டி உயிர்பிழைத்த அதிசயம் என அங்குள்ள கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

உலகிலேயே ஆறு கால்களுடன் பிறந்த நாய்குட்டி உயிருடன் இருப்பதில் இதுதான் முதல் நாய்க்குட்டி ஆக இருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெசினா என்ற தண்டுவட பாதிப்புடன் இந்த நாய்க்குட்டி பிறந்து இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

ஆறு கால்கள் மட்டுமல்லாது இந்த நாய் குட்டிக்கு இரண்டு கால்கள் மற்றும் இரண்டு இனப்பெருக்க உறுப்புகள் உடன் இந்த நாய்க்குட்டி பிறந்துள்ளது. இந்த நாய்க்குட்டி தற்போது நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் ஃபேஸ்புக் பகுதியில் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon