பனிப் புயலால் பாதிக்கப்பட்டுள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மின் வினியோகம் இல்லை..!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் பனிப் புயலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் இதுவரை மின் வினியோகம் சீராகவில்லை. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு டெக்ஸாஸ் மாநிலத்தில் வீசிய கடும் பனிப்புயலால் அந்த மாகாணமே நிலைகுலைந்துள்ளது.
குழாய்களில் தண்ணீர் உறைந்து போனதால் மக்கள் செய்வதறியாமல் திகைத்து போய் உள்ளனர். மின்வினியோகம் இல்லாததால் ஹீட்டர்களை பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.
இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மின் விநியோகம் சீராகவில்லை. பாதிக்கப்பட்டோருக்கு தன்னார்வலர்கள் உணவையும் தண்ணீரையும் வழங்கி வருகின்றனர்.






