--- --:--:-- --

மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் கட்டுப்பாடுகள்..!

3

மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அங்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புனேவில் வரும் 28ஆம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த கொரொனா பாதிப்பில் 74 சதவீதத்திற்கும் மேலான பாதிப்பு கேரளா மற்றும் மகாராஷ்டிராவிலேயே பதிவாகியுள்ளது.

 

கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரொனா பரவல் கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து 5-வது நாளாக கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளதால் அங்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவையை தவிர ஹோட்டல்கள்.

 

ரெஸ்டாரண்ட் கடைகளை இரவு 10 மணிக்குள் அடைக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. புனேவில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 28ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 

தனிமனித இடைவெளி என கட்டுப்பாடுகளை முதல் முறையாக கடைபிடிக்காததால் கொரொனா பரவல் அதிகரித்து வருவதாகவும் கொரொனா வைரஸ் நம்மை சுற்றியே உள்ளதால் மெத்தனமாக இருப்பது ஆபத்து எனவும் மகாராஷ்டிர சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

 

உண்மையில் மீண்டும் பொதுமுடக்கம் கொண்டு வருவது குறித்து எந்த திட்டமும் இல்லை என்றும் விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்க இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon