--- --:--:-- --

மெரினா கடற்கரையில் பள்ளி மாணவன் கடலில் மூழ்கி பலி..!

13

மெரினா கடற்கரையில் பள்ளி மாணவன் கடலில் மூழ்கி பலியாகியுள்ளார். அதை மீறி குளிக்க சென்ற 2 பள்ளி மாணவர்கள் ராட்சத அலையில் சிக்கியுள்ளனர். அங்கு இருந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் நேரடியாக சென்று அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

 

இருவரையும் கரைக்கு கொண்டு வந்தபோது ஒரு மாணவர் இறந்துவிட்டார். இறந்த மாணவரின் பெயர் தனுஷ். பழைய வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்தவர். இப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

 

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. உயிருடன் மீட்கப்பட்ட மாணவனின் பெயர் லோகேஷ். அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய பெற்றோருக்கும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர் .

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon