--- --:--:-- --

கல்லூரி நுழைவு வாயிலில் விரட்டி விரட்டி மாணவிக்கு தாலி கட்ட முயன்ற இளைஞர்..!

4

நாமக்கலில் கல்லூரி நுழைவு வாயிலில் விரட்டி விரட்டி மாணவிக்கு தாலி கட்ட முயன்ற இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

 

ஏலூர் பட்டியை சேர்ந்த கிருஷ்ணனுக்கும் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவிக்கும் திருமணம் செய்ய இருதரப்பிலும் பெற்றோர்கள் நிச்சயம் செய்து இருந்ததாகவும் பின்னர் சில காரணங்களால் திருமணத்தை நிறுத்திய தாகவும் கூறப்படுகிறது.

 

இதனை ஏற்க மறுத்த பாலகிருஷ்ணன் கல்லூரிக்கு சென்ற மாணவியை பின்தொடர்ந்து சென்று தாலி கட்ட முயற்சித்துள்ளார். ஓடி ஒளிந்த போதும் விரட்டி விரட்டி தாலிகட்ட முயன்ற இளைஞரை கண்டு அந்த மாணவிகள் கூச்சலிட்ட நிலையில் பொதுமக்கள் ஆசிரியர்கள், இளைஞரை தடுத்து நிறுத்தி போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon