--- --:--:-- --

சின்னத்திரை நடிகை ஷியாமிலிக்கு வந்த சிக்கல்..! போலீசில் புகார்..!

2

னது பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கி அவதூறு பரப்பியதாக நபர் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சின்னத்திரை நடிகை ஷாமிலி சுகுமார் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

 

நடிகர், நடிகைகள் என்றாலே எந்த அளவிற்கு பேரும் புகழும் உள்ளதோ அதே அளவிற்கு அவர்களைப் பற்றியான சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. அப்படி சின்னத்திரை நடிகை ஷாமிலி சுகுமார் தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

 

இவர் சின்னத்திரையில் ரோஜா, தென்றல், சரவணன் மீனாட்சி விட தொடர்களில் நடித்துள்ளார். இது மட்டுமில்லாமல் சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.

 

இவர்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக ஏராளமான புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருவதால் இன்ஸ்டா பக்கத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் நடிகையை பின் தொடர்ந்து வருகின்றனர்.

 

சில தினங்களுக்கு முன்பாக ஷியாமிலி சுகுமர் பெயரிலேயே போலியான கணக்கு ஒன்று இன்ஸ்டாகிராமில் தொடங்கப்பட்டு அதில் அவரைப் பற்றியும் அவருடைய குடும்பத்தினர் பற்றியும் அவதூறான கருத்துகள் பகிரப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

 

ஷாமிலி இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. இதனை பார்த்து அதிர்ந்துபோன சின்னத்திரை நடிகை ஷாமிலி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon