--- --:--:-- --

அதிமுக பிரமுகர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்ட முயன்ற சம்பவம்..!

7

சென்னை அம்பத்தூர் அருகே ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப்பகலில் வெட்டவெளியில் அதிமுக பிரமுகர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்ட முயன்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

மூர்த்தி என்பவரின் வீட்டிற்கு வந்த கும்பல் ஒன்று திருமண அழைப்பிதழ் கொடுக்க வேண்டும் எனக் கூறி அழைத்துள்ளது. அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த அவரை அந்த கும்பல் அரிவாளால் தாக்கி உள்ளது. இதனால் அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக மூர்த்தி சிறிது தூரம் ஓடியுள்ளார். பின்னர் அரிவாளை பிடிங்கி வெட்டியுள்ளார்.

 

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த மூர்த்தி மற்றும் பிரபாகரன் ஆகியோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மூர்த்தியை கொலை செய்ய முயன்ற ராஜு மற்றும் மற்றவர்களை போலீசார் 2 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon