--- --:--:-- --

விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டுள்ள இயக்குனர் வெற்றிமாறன்..!

3

ரசு மக்கள் நலனை காக்க வேண்டுமே தவிர கார்ப்பரேட் நிறுவனங்களை அல்ல என இயக்குனர் வெற்றிமாறன் பதிவிட்டுள்ளார். விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்த் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

இதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் சர்வதேச பிரபலங்கள் தொடங்கி தமிழ் திரை கலைஞர்கள் வரை பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் வெற்றிமாறன் அரசாங்கத்திற்கு அதிகாரம் மக்களால் தான் வழங்கப்படுகிறது எனவும் அதனால் அரசு மக்கள் நலனை காக்க வேண்டுமே தவிர கார்ப்பரேட் நிறுவனங்களை அல்ல என பேஸ்புக்கில் பதிவிட்டு இருக்கிறார்.

 

மேலும் தேசத்தின் ஆன்மாவை காக்கப் போராடும் விவசாயிகளை ஆதரிப்பதே ஜனநாயகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நடிகர் சித்தார்த் தனது பதிவில் விவசாயிகளின் போராட்டங்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிட்டு பிரபலங்களை கடுமையாக சாடியிருக்கிறார்.

 

அது மக்கள் தங்கள் கதாநாயகர்களை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் இல்லையெனில் அந்த அபிமானத்தில் இருந்தவர்கள் மீள்வதை பார்க்க நேரிடும் எனவும் தெரிவித்திருக்கிறார். மேலும் அவர்களை முதுகெலும்பில்லாதவர்கள் எனவும் விமர்சித்திருக்கிறார்.

 

இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் மக்களுக்கு போராடும் எல்லா உரிமையும் இருக்கிறது எனவும் விவசாயிகளை ஏர்முனை கடவுள் என்று அழைத்தால் மட்டுமே நம்மை படைத்தவர் மகிழ்வான் எனவும் விவசாயிகளுக்கு ஆதரவான தமது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon