--- --:--:-- --

ஒரு புதுமண தம்பதி வடிவமைத்த ஆதார் மெனு கார்டு..!

4

கொல்கத்தாவை சேர்ந்த ஒரு புதுமண தம்பதி வடிவமைத்த மெனு கார்டு அடேங்கப்பா எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க என நெட்டிசன்களை கேட்க வைத்துள்ளது. கோவிலுக்கு பிந்தைய காலத்தில் திருமணங்கள் மிகவும் ஆக்கப்பூர்வமாகவும் தனித்துவமாக மாறி வருகின்றது.

 

உற்றார் உறவினர் புடைசூழ நடைபெற்ற திருமணங்கள் மிகவும் நெருக்கமான உறவினர்கள் மட்டுமே வைத்து சிறிய அளவிலேயே நடைபெற்று வருகின்றன. சொந்தங்கள் ஆன்லைனில் இணைகின்றனர்.

 

கொல்கத்தாவை சேர்ந்த ஒரு தம்பதியினர் தங்களது சுவாரசியமான மற்றும் தனித்துவமான திருமணம் மெனு கார்டு மூலம் தற்போது இணையத்தை கலக்கி வருகின்றனர். கொல்கத்தாவின் ராஜர் பகுதியை சேர்ந்தவர்கள் கோகுல்சகா – சுபர்ணா தம்பதி.

 

இவர்களுக்கு கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. வட இந்தியாவில் சில பகுதிகளில் திருமண பத்திரிக்கையோடு திருமணத்தன்று பரிமாறப்படும் மெனு கார்டு சேர்த்தே வழங்கப்படும் வழக்கம் இருந்து வருகிறது. இதனை வித்தியாசமாக செயல்படுத்த நினைத்த தம்பதி ஆதார் கார்டு போல வடிவமைத்து வழங்கியுள்ளனர்.

 

இந்த மெனுவில் மெயின் டிஷ் தொடங்கி சைடிஷ் செரிமான பீடா வரை வகைவகையான வெரைட்டிகள் அச்சிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆதார் இன்று ஒரு நாள் மட்டுமே நாளை காலாவதியாகி விடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon