--- --:--:-- --

சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் மார்ச் 26 ஆம் தேதி வெளியாகிறது..!

1

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் மார்ச் 26 ஆம் தேதி வெளியாகிறது. கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

 

படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் 12ஆம் தேதி படத்தை வெளியிட முயற்சி நடைபெற்று வந்தன. ஆனால் மார்ச் 26 ஆம் தேதி படம் வெளியாகிறது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

 

அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon