--- --:--:-- --

நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் விசாரிக்கப்பட்டுள்ள 13 சாட்சிகள்..!

12

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டார் என நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளதாக காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சித்ராவின் கணவருக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை நீதிபதி பாரதிதாசன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது.

 

அப்போது வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. 13 சாட்சிகள் மீண்டும் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

இதையடுத்து வழக்கு விசாரணையை பிப்ரவரி 5 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு உள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon