--- --:--:-- --

சசிகலா அதிமுகவில் இணைக்கப்பட வாய்ப்பே இல்லை..!

12

சிகலாவை கட்சியை அதிமுகவில் இணைக்கப்பட வாய்ப்பே இல்லை என்பது 100% திட்டவட்டமான விஷயம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறுகிறார். துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் மகன் கூறிய கருத்து மனிதாபிமான அடிப்படையில் ஆனவை என்றும் சசிகலா அரசியலில் ஈடுபடக்கூடாது என அவர் கூறியதாகவும் சுட்டிக்காட்டினார்.

 

அதிமுக தலைமையில் அமைத்த மெகா கூட்டணிக்கு தேர்தல் நெருங்கும் போது மேலும் சில கட்சிகள் வர வாய்ப்புள்ளதாக ஜெயகுமார் தெரிவித்தார். கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து உரிய நேரத்தில் அதிமுக தலைமை இடத்தில் இருந்து அறிவிப்பு வெளியாகும். பாமக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை என்று அமைச்சர் பதிலளித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon