சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2 ஆம் தேதி வெளியீடு..!
வருகிற பிப்ரவரி 2ஆம் தேதி சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படுகிறது. தேர்வு அட்டவணையை வெளியிட உள்ளதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கொரொனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டிருந்த சூழ்நிலையில் தற்போது 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறந்து வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





