நடிகர் தீப் சித்து மீது காவல்துறை வழக்கு பதிவு..!
டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியின்போது செங்கோட்டையில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக நடிகர் தீப் சித்து குண்டூர் கும்பலை சேர்ந்த லகா சிதான் ஆகியோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
அதன்படி பண்டைய நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் இடங்கள் மற்றும் எச்சங்கள் சட்டம் மற்றும் ஆயுத சட்டம் ஆகிய பிரிவுகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. வன்முறையைத் தொடர்ந்து செங்கோட்டை வருகிற 31-ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதற்கான காரணம் என்னவென்று இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை தெரிவிக்கவில்லை. முன்னதாக குடியரசு தினத்தன்று செங்கோட்டைக்கு டிராக்டரின் பேரணியாக சென்ற விவசாயிகள் அங்குள்ள நினைவு சின்னத்தில் பறந்த இந்திய தேசியக் கொடியை இறக்கி விட்டு காலிஸ்தான் கொடியை ஏற்றிய தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.






