--- --:--:-- --

ஆடைக்கு மேலே சிறுமியின் உடலை தொடுவது பாலியல் வன்கொடுமை ஆகாது..!

11

டைக்கு மேலே சிறுமியின் உடலை தொடுவது போக்சோ சட்டத்தில் பாலியல் வன்கொடுமை ஆகாது என்ற மும்பை உயர்நீதிமன்றத்தின் சர்ச்சைக்குரிய தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

 

மகாராஷ்டிர மாநிலத்தில் 12 வயது சிறுமியின் உடலை சீண்டி இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து இருப்பது குறித்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் நாகூர் கிளை கடந்த 19-ஆம் தேதி தீர்ப்பு ஒன்றினை வழங்கியது.

 

நபர் சிறுமியின் ஆடைக்கு மேலே உடலை சீண்டினால் அது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் ஆகாது என்று தீர்ப்பு வழங்கியிருந்தது. இது பெரும் அதிர்ச்சியையும் விமர்சனங்களையும் ஏற்படுத்திய நிலையில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கொண்ட இடத்தில் முறையிட்டார்.

 

மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாகவும் எதிர்காலத்தில் பல்வேறு எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றுஅவர் கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இது பற்றி தனியாக வழக்கு பதிவு செய்ய அனுமதி தந்துள்ளார்.

 

இந்த வழக்கில் குற்றவாளிகளை விடுவித்த மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். வழக்கு குறித்து மகாராஷ்டிரா அரசும் குற்றம் சாட்டப்பட்ட தரப்பும் இரண்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon