--- --:--:-- --

கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் முயற்சி..!

4

டலில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை எடுத்து மறுசுழற்சி செய்யும் புதிய படகினை பிரான்சை சேர்ந்தவர் கண்டுபிடித்துள்ளார். டி சி கிளிநர்ஸ் என்ற குழுவை சேர்ந்த யுவான் என்பவர் பிளாஸ்டிக் பொருட்களால் கடலில் மாசு ஏற்படுவதை கண்டு அதனை அகற்ற தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டார்.

 

இதனை தொடர்ந்து அவரது குழுவினர் போட்டிகளில் பயன்படுத்தப்படும் பாய்மரப் படகில் சற்று மாற்றம் செய்து கடலில் மிதக்கும் கழிவுகளை எடுத்து தரம் பிரிக்கின்றனர்.

 

பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி மூலம் மின்சாரமாக மாற்றி அதன் மூலம் தங்கள் படகினை செலுத்துவதற்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த கப்பலை 2024ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளதாக யுவான் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon