--- --:--:-- --

அமைச்சர் செங்கோட்டையன் வீட்டின் முன் திரண்ட ஆசிரியர்கள்..!

3

சிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றும் வெயிட்டேஜ் முறையால் பணியை இழந்தவர்கள் பணி வழங்ககோரி அமைச்சர் செங்கோட்டையன் வீட்டின் முன் நீண்ட நேரம் காத்திருந்தனர். அமைச்சர் இல்லாததை அறிந்து கலைந்து சென்றனர்.

 

2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் வெயிட்டேஜ் முறையால் பணி வாய்ப்பை இழந்த ஆசிரியர்கள் தங்களுக்கு ஆசிரியர் பணி வழங்க வலியுறுத்தி அமைச்சர் செங்கோட்டையன் வீட்டின் முன்பு திரண்டு உள்ளனர்.

 

அவர்களை காவல்துறையினர் கோபிசெட்டிபாளையம் சத்தியமங்கலம் பிரதான சாலையிலேயே தடுத்து நிறுத்தினர். இதனிடைய அமைச்சர் செங்கோட்டையன் வீட்டில் இல்லை என்பதும் நம்பியூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றதையும் அறிந்த ஆசிரியர்கள் அங்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon