--- --:--:-- --

குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடைபெறும்..!

15

திட்டமிட்டபடி குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடைபெறும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. இதற்காக சுமார் 10 ஆயிரம் டிராக்டர்களை விவசாயிகள் டெல்லியில் நிறுத்தியுள்ளனர். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் பெரும் போராட்டத்தை தொடர விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் தொடர் தோல்வியில் முடிந்து வருகின்றன.

 

வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் மட்டுமே மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு உறுதியாக உள்ள நிலையில் வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்பதில் விவசாயிகளும் உறுதியாக உள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon