--- --:--:-- --

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு கொலை மிரட்டலா..?

11

வெளிநாட்டு விவகாரங்களுக்கான ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கடந்தாண்டு கொலை செய்யப்பட்டதற்காக அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் பழிவாங்க படுவார் என்று ஈரான் தலைவர் மிரட்டல் விடுத்ததையடுத்து அவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது.

 

ஈரான் தலைவர் காமினி அலுவலகம் புகைப்படத்துடன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் டிரம்ப் மைதானத்தில் விளையாடுவது போன்றும் அருகே போர் விமானத்தின் நிழல் இருப்பது போன்றும் வடிவமைக்கப்பட்டிருந்தது.

 

சுலைமானியை கொலை செய்தவர் என்றும் அதற்கு உத்தரவிட்டவர் எந்த நேரத்திலும் பழிவாங்க படுவார்கள் என்றும், பழிவாங்குவது தவிர்க்க முடியாதது என்றும் எச்சரிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த புகைப்படத்தை நீக்கிவிட்டு நிர்வாகம் அவரது கணக்கையும் முடக்கியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon