--- --:--:-- --

டாஸ்மாக் மதுபான கடைகளில் வாங்கும் மதுவுக்கு உரிய ரசீது வழங்க வேண்டும்..!

7

டாஸ்மாக் மதுபான கடைகளில் வாங்கும் மதுவுக்கு உரிய ரசீது வழங்க வேண்டும் என்றும் கடைகள் முன்பாக மது பாட்டில்களின் விலை பட்டியல் அடங்கிய தகவல் பலகை வைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் முறைகேடான முறையில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்கப் படுவதாகவும், விற்பனையாகும் மது பானத்திற்கு உரிய ரசீது வழங்கப்படவில்லை என்றும் புகார் தெரிவித்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

அதில் விற்பனையாகும் மது பானங்களுக்கு உரிய ரசீது வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட மதுபானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக தொடர்ச்சியாக புகார் வருவதாகவும் விலை நிர்ணயம் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக விதிகள் இருந்தாலும் அவை அமல்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

 

முறைகேடுகளை தடுக்க அனைத்து டாஸ்மாக் கடைகள் முன்பாக மதுபான பாட்டில்கள் விலை பட்டியல் அடங்கிய தகவல் பலகை வைக்கவேண்டும் என்றும், வாங்குமளவிற்கு உரிய ரசீது வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

 

நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அமல்படுத்த தவறினால் துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். அத்துடன் உத்தரவு அமல்படுத்தப்பட்டது குறித்து வரும் பிப்ரவரி 6ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon